暗記メーカー
ログイン
12th இந்திய தேசிய காங்கிரஸ்
  • Yoseph E

  • 問題数 57 • 1/30/2024

    記憶度

    完璧

    8

    覚えた

    22

    うろ覚え

    0

    苦手

    0

    未解答

    0

    アカウント登録して、解答結果を保存しよう

    問題一覧

  • 1

    INC என்பதன் விரிவாக்கம் என்ன?

    Indian National Congres.

  • 2

    இறக்குமதியாகும் பருத்தி இழைத் துணிகளின்மீது இறக்குமதிவரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் எந்த ஆண்டு இயக்கம் நடத்தினர்?

    1875

  • 3

    அரசுப் பணிகள் இந்தியமயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது எந்த ஆண்டு?

    1877

  • 4

    வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றது எந்த ஆண்டு?

    1878

  • 5

    இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடைபெற்றது எந்த ஆண்டு?

    1883

  • 6

    ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்கு எந்த ஆண்டு தலைமை ஏற்றிருந்தார்?

    1884 ஆம் ஆண்டு டிசம்பர்

  • 7

    ICS என்பதன் விரிவாக்கம் என்ன?

    Indian Civil Service

  • 8

    எந்தக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவானது?

    1884ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பிரம்ம ஞான சபையின் கூட்டம்

  • 9

    இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் எந்த நாளில் உருவாக்கப்பட்டது?

    1885 டிசம்பர் 28

  • 10

    இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் எங்கே உருவாக்கப்பட்டது?

    பம்பாய்

  • 11

    இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் யார்?

    A.O. ஹுயூம் தவிர இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினரான W.C. பானர்ஜி

  • 12

    இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது எது?

    இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைப்பது

  • 13

    நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கெண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாகச் செயல்பட்டது எது?

    இந்திய தேசிய காங்கிரஸ்

  • 14

    நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடவும் காங்கிரசின் பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இடமளித்தது எது?

    இந்திய தேசிய காங்கிரஸ்

  • 15

    இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த தொடக்க காலத் தலைவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்?

    சமூகத்தின் உயர்குடிப் பிரிவு

  • 16

    இந்திய தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தினவர்கள் யார் யார்?

    வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் போன்றோர்.

  • 17

    காங்கிரசின் தொடக்க காலத்தலைவர்கள் அரசியல் ‎‫சட்டம்‬‎ அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் எந்த புனைப் பெயரைப் பெற்றனர்?

    மிதவாத தேசியவாதிகள்

  • 18

    எந்த ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன?

    1890களின் பிற்பகுதியிலிருந்து

  • 19

    ஆங்கிலேயருக்கு வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது. விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் இந்திய தேசிய காங்கிரஸில் பரிந்துரைத்தவர்கள் யார் யார்?

    பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள்.

  • 20

    பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது. விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் பரிந்துரைத்தனர். இத்தன்மையுடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

    தீவிர தேசியவாதிகள்

  • 21

    திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியது எந்த ஆண்டு?

    1897

  • 22

    "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என கூறியவர் யார்?

    பால கங்காதர திலகர்

  • 23

    இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தலைவர்கள் தங்களது மனுக்கள், பிரார்த்தனைகள் மூலமாக மிதவாத தேசியவாதிகள் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார அல்லது நிர்வாகச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகத் திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் தொண்டர்களும் எதை தருமாறு கோரினர்?

    சுயராஜ்ஜியம்

  • 24

    ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை இந்தியர்களால் ஆவேசமாக எதிர்க்கப்பட்டது எந்த ஆண்டு?

    1905

  • 25

    சுதேசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    1905

  • 26

    ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்ததோடு, சுதேசித் தொழில்கள், தேசியக்கல்வி, சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது எந்த இயக்கம்?

    1905இல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம்

  • 27

    இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது எந்த ஆண்டு?

    1885

  • 28

    1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களில் எத்தனை பங்கு பத்திரிகையாளர்கள் இருந்தனர்?

    மூன்றில் ஒரு பகுதியினர்

  • 29

    தாதாபாய் நௌரோஜி எந்தெந்த பத்திரிகைகளைத் தொடங்கினார்?

    இந்தியாவின் குரல் (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar)

  • 30

    தாதாபாய் நௌரோஜி எந்தெந்த பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார்?

    இந்தியாவின் குரல் (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar)

  • 31

    இந்தியாவின் குரல் (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar) என்ற பத்திரிகைகளை தொடங்கியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 32

    சுரேந்திரநாத் பானர்ஜி எந்த பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார்?

    பெங்காலி

  • 33

    பாலகங்காதர திலகர் எந்தெந்த பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார்?

    கேசரி, மராட்டா

  • 34

    இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய செய்திகளை எந்தெந்த பத்திரிகைகள் மக்களுக்கு எடுத்துச் சென்றன?

    இந்தியாவின் குரல், ராஸ்த் கோப்தார், பெங்காலி, கேசரி, மராட்டா.

  • 35

    தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும், தொழிலாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமெனஉறுதியாக நம்பினவர் யார்?

    பால கங்காதர திலகர்

  • 36

    பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நாள் எது?

    1897 ஜூலை 27

  • 37

    1897 ஜூலை 27இல் திலகர் கைது செய்யப்பட்டு எந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்?

    இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A

  • 38

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாய் விளங்கின உரிமைகள் எவை?

    கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம்

  • 39

    இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் என அறியப்படுபவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 40

    தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

    1870களில்

  • 41

    தாதாபாய் நௌரோஜிஇங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

    1892

  • 42

    எந்த நிலையில் தாதாபாய் நௌரோஜி லண்டனில் 'இந்திய சங்கம் (Indian Society - 1865), கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association 1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார்?

    1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்

  • 43

    இந்திய சங்கம், கிழக்கிந்தியக் கழகம் என்ற அமைப்புகள் எங்கு தொடங்கப்பட்டன?

    லண்டன்

  • 44

    இந்திய சங்கம் என்ற இயக்கம் தாதாபாய் நௌரோஜி அவர்களால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    1865

  • 45

    கிழக்கிந்தியக் கழகம் என்ற அமைப்பை தாதாபாய் நௌரோஜி அவர்களால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    1866

  • 46

    இந்திய சங்கம் (Indian Society - 1865), கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association 1866) என்ற அமைப்புகள் யாரால் தொடங்கப்பட்டன?

    தாதாபாய் நௌரோஜி

  • 47

    தாதாபாய் நௌரோஜி எத்தனை முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

    மூன்று முறை

  • 48

    வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத ‎இந்திய ஆட்சியும்' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 49

    தாதாபாய் நௌரோஜி "வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத ‎இந்திய ஆட்சியும்" என்ற புத்தகத்தை எந்த ஆண்டு வெளியிட்டார்?

    1901

  • 50

    எந்த புத்தகம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தாதாபாய் நௌரோஜி செய்த முக்கியப் பங்களிப்பாகும்?

    வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத ‎இந்திய ஆட்சியும்

  • 51

    எந்த புத்தகத்தில் தாதாபாய் நௌரோஜி செல்வச் சுரண்டல்" எனும் கோட்பாட்டை முன் வைத்தார்?

    வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத ‎இந்திய ஆட்சியும் - 1901

  • 52

    ஆங்கிலேயரின் செல்வச் சுரண்டல்" எனும் கோட்பாட்டை வெளிக்கொணர்ந்த புத்தகம் எது?

    வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத ‎இந்திய ஆட்சியும்

  • 53

    ஆங்கிலேயரின் செல்வச் சுரண்டல்" எனும் கோட்பாட்டை வெளிக்கொணர்ந்த புத்தகமான"வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத ‎இந்திய ஆட்சியும் - 1901" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 54

    எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது எனக் கூறியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 55

    1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 56

    1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார். லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட வேண்டிய பங்கு, இருப்புப்பாதைத் துறையில் (Railways) முதலீடு செய்தவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவாறு தரப்பட வேண்டிய வட்டி, பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ஆகிய இவையனைத்துக்கும் பதிலாகவே அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் வாதாடியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி

  • 57

    தாயகக் கட்டணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக உறுதிபடக் கூறியவர் யார்?

    தாதாபாய் நௌரோஜி